மதுரை மாவட்டம் தல்லாகுளம் அருகே உள்ள பிடி. ராஜன் சாலையில் உள்ள பகுதியில் மஸாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அகில் வணிக வளாகத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: ஆறு பேர் கைது! - போலீசார் விசாணை
மதுரை: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த ஆறு பேரை தல்லாக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.
madurai
வேதா ஆயுர்வேதா என்ற பெயரில் மஸாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி உள்ளே சட்டத்திற்கு புறம்பாக பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கிருபாகரன், சரவணன், அமிர்தவேல் உள்பட 6 பேரை தல்லாக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடமிருந்து தொலைபேசி, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.