கரோனா வைரஸ் பரவல் காரணமாக மருந்தகங்களில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளுக்கு தட்டபாடு ஏற்பட்டுள்ளது. அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில மருந்தக உரிமையாளர்கள் அவற்றை அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். அதனால் அரசு முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் செயல்படும் சில மருந்தகங்களில் கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் பதுக்கி வைக்கப்படுள்ளதாக, மாவட்ட குடிமை பொருள் வழங்கல் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.