மதுரை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் வாங்கவருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். அதனால் மதுரையில் பல பகுதிகளில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனை வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். அதன்படி ரூ.10 மதிப்புள்ள முகக்கவசம் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
அதனால் மாவட்ட நிர்வாகம் மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள தையல்கலை ஆண், பெண் கைதிகளின் ஒத்துழைப்போடு சிறையிலேயே மூன்று அடுக்கு முகக் கவசங்களைத் தயாரித்துவந்தது. அவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன.
அதனால் அடுத்தபடியாக மீதம் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களைப் பொதுமக்களுக்கு விற்பனைசெய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி சிறைச்சாலை வளாக விற்பனையகத்தில் அந்த முகக்கவசங்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க:மதுரைக்கு வந்த ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்...!