மதுரை:பாண்டிகோவில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகம் சார்பில், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, 549 பயனாளர்களுக்கு சுமார் 4.50 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கினர்.
இதனைதொடர்ந்து கிழக்கு தாலுகாவிற்குட்பட்ட 91 பயனாளர்களுக்கு, 63.70 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர்கள் வழங்கினர்.
சமுதாய முன்னேற்றம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “திமுகவின் அடிப்படைக் கொள்கையான பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் முறையே, சமுதாய முன்னேற்றம் அடைந்ததற்கு காரணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 18 வயது கீழ் பெண்கள் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் உள்ளது. ஆனால் வடமாநிலங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் கல்வி பெறாமல் இருந்து வருவதால், அங்கு பொருளாதார வளர்ச்சி இல்லை. மற்ற வடமாநிலங்களை விட தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளதற்கு இம்மாதிரியான திட்டங்கள் தான் காரணம்.” என்றார்.
பெண்கள் முன்னேற்றம்