மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்குத் தாக்கல்செய்தார். அவர் தாக்கல்செய்த மனுவில், ’’மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே இருந்த பழமையான குன்னத்தூர் சத்திரத்தில் மதுரை மாநகராட்சியின் வரி வசூல் அலுவலகம் இயங்கிவந்தது. அதற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் இருந்தது.
இங்கு தினமும் பூஜை, வழிபாடு, அன்னதானம் என நடைபெற்றுவந்தது. நாளைடைவில் அந்தப் பழமையான சத்திரம் உறுதித்தன்மை இல்லாததைக் காரணம்காட்டி இடிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்து மரகதலிங்கம், சந்தனப்பேழை, செப்புப்பட்டயம் போன்றவை எடுக்கப்பட்டன.
இவை அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டு மதுரை மாநகராட்சி அலுவலகக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர், சில நாள்கள் கழித்து அந்த மரகதலிங்கம் மாயமாகிவிட்டது.
இதையடுத்து, அதைக் கண்டுபிடித்து மீண்டும் பொதுமக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் மனு அளித்தனர்.