மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று (டிசம்பர் 10) மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "அஜய் வாண்டையார் நற்பணி மன்றம் சார்பில் நாளை (டிசம்பர் 11) மதுரை விமான நிலைய சாலையில் உள்ள நிலையூர் மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்தவுள்ளோம்.
இதற்கு அனுமதி கேட்டு ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். ஆனால் கரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி விழாவுக்கு அனுமதி தர காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.
கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி விழா நடத்தப்படும். எனவே, வடமாடு மஞ்சு விரட்டு விழா, நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.