தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிவாசகத்தின் மனைவி, சகோதரிக்கு பரோல் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்! - maoist manivasakam funeral case

மதுரை: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, அவரது சகோதரி ஆகியோருக்கு பரோல் வழங்குவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறி வழக்கை நாளை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

manivasagam funeral case: parole for wife and sister to be decided later

By

Published : Nov 13, 2019, 9:57 PM IST

நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த செல்ல அன்பரசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகழிக்காடு வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார் என மாலை 6:30 மணியளவில் எனக்கு செல்போன் அழைப்பு வந்தது. இறந்தவர் மணிவாசகம்தான் என்பதை உறுதி செய்ய அவரது மனைவியே அடையாளம் காணத் தகுதியானவர். ஆனால், காவல் துறையினர் மணிவாசகத்தை அடையாளம் காட்ட தூரத்து உறவினர்களை அழைத்துள்ளனர். கேரள காவல் துறையினரால் மணிவாசகம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இந்த சூழலில் மணிவாசகத்தின் மனைவி கலா, அவரது சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இருவரையும் அனுமதிக்கக் கோரியும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே மனிதநேயத்தின் அடிப்படையில் மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். மேலும் அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிவாசகத்தின் உடல் சேலம் வந்த பிறகு அவரின் மனைவி, சகோதரி ஆகியோருக்கு பரோல் வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details