மதுரை மாநகருக்கு உட்பட்ட திடீர் நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் அந்த பகுதியில் சிலரிடம் தகராறு செய்ததாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன் தினம் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே மருத்துவப் பரிசோதனையில் அந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து திடீர் நகர் காவல் நிலையம், நீதிபதியின் இல்லம் மற்றும் சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடைக்கப்பட்ட சிறை வளாகத்திலேயே அவரை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு கரோனா - போலீசார் அதிர்ச்சி - மதுரை செய்திகள்
மதுரை: அடிதடி வழக்கில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட பின்பு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
police station madurai
இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உணவிற்கு வழியில்லை... குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை!