மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி அர்ச்சனா தேவி(வயது 19) மற்றும் இரண்டு மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
மனைவியை கொன்று உடலை பாத்ரூமில் மறைத்த கணவன் - மதுரையில் பயங்கரம்
மதுரை: அவனியாபுரம் பகுதியில் மனைவியை கொலை செய்து, அவரின் சடலத்தை வீட்டின் கழிவறையில் வைத்து தப்பியோடிய கணவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக சரவணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு வந்த மனைவி அர்சனா தேவியிடம் சரவணன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அர்ச்சனா தேவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சரவணன், வீட்டில் உள்ள கழிவறையில் உடலை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மாலை வீட்டிற்கு வந்த அர்ச்சனா தேவியை நீண்டநேரம் காணாததால் சந்தேகமடைந்த அருகில் வசிக்கும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரவணனின் வீட்டை ஆய்வு செய்தபோது, அர்ச்சனா தேவி கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்த அவனியாபுரம் காவல் துறையினர், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.