மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற லாரியை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்த போது சுமார் 20 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
20 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது மேலும் அரிசியை கடத்தியதாக மதுரையைச் சேர்ந்த முத்து என்ற கொரில்லா முத்துவை கைது செய்தனர்.
காவல்துறையினர் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மீது ஆறுக்கும் மேற்பட்ட கடத்தல் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை!