தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது! - Madurai District News

மதுரை: நிலையூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனைசெய்த நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து 239 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டன.

கைதான கதிரவன்
கைதான கதிரவன்

By

Published : May 28, 2020, 12:25 PM IST

மதுரை மாவட்டம் நிலையூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நிலையூர் பகுதியில் ரோந்துப் பணிக்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த கதிரவன் என்ற நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது.

காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்ட மதுபாட்டில்களும், இருசக்கர வாகனமும்
பின்னர் அவரிடமிருந்து 239 மதுபாட்டில்கள், ரூ.4000, இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் கதிரவன் மீது ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details