மதுரை ஒத்தக்கடை அடுத்த ஒய். புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணக்கனி (45). இவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி செய்தி அறிவிப்பு கொடுத்ததுபோல் நகைச்சுவையான பதிவை பதிவிட்டார். இதனைக் கண்ட கிராம நிர்வாக அலுவலர் அழகேஸ்வரி , இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மோடிக்கு எதிராக முகநூலில் பதிவு: விசிக நிர்வாகி கைது! - மதுரையில் மோடியை விமர்சித்து முகநூலில் பதிவிட்டவர் கைது
மதுரை: பிரதமர் மோடியை கலாய்த்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்த விசிக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த மனுவில் "முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் உத்தரவின் பேரில் காவல் துறையினர் ஒய்.புதுப்பட்டியில் வசிக்கும் சரவணக்கனியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவு எழுதியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், சரவணக்கனியை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுகாதாரத் துறை அலுவலர்களை மிரட்டிய திமுக பிரமுகர் கைது!
TAGGED:
Madurai district news