தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு! - southern railway madurai

இந்திய ரயில்வேயில் உள்ள 17 ரயில்வே மண்டலங்களுக்கு இடையே தேசிய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் மதுரை கோட்ட ரயில்வே ஊழியர் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு!
நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு!

By

Published : Nov 29, 2022, 11:02 PM IST

மதுரை:இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. தேசிய அளவில் ரயில்வேக்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதில் மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் ரயில் நிலைய பயண சீட்டு அலுவலர் எமில் ராபின் சிங் 8 பதக்கங்கள் வென்றுள்ளார். 4 தங்கம்,2 வெள்ளி,2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.

இவரது சாதனையை அறிந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் அவரை அழைத்து பாராட்டினார். அவருடன் முதுநிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி எம். இசக்கி ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் பிரச்சனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details