தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு - நூதன முறையில் வாலிபர் சங்கம் போராட்டம் - madurai novel protest against TASMAC opening

மதுரை : டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நூதன முறையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tasmac

By

Published : May 7, 2020, 8:26 AM IST

தமிழ்நாடு அரசு இன்று முதல் மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த முடிவைக் கைவிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நோயாளிகளைப் போன்று வேடம் தரித்து, சுவாசக் கருவிகள் பொருத்தியவாறு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர்களின் நூதனப் போராட்டம்

சமூக இடைவெளி பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, கண்டன வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி ஆளுக்கொரு குடை பிடித்து நின்று போராட்டம் செய்தனர்.

இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details