மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி புக்கிங் ஆபீசில் குமார் என்ற 40 வயது இளைஞர் சமூக வலைதளங்களில் சிறுமிகள் தொடர்பான ஆபாசமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னை, திருச்சி கோவையை தொடர்ந்து மதுரையிலும் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் சிறுமிகளின் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அண்மையில் புள்ளி விவரத்துடன் மத்திய அரசு வெளியிட்டது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் (National Center for Missing & Exploited Children ) சைபர் கிரைம் அறிக்கையின் அடிப்படையில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ மற்றும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.