தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு நேரத்தில் இளைஞர் படுகொலை! - மாடக்குளம் இளைஞர் கொலை

மதுரை: ஊரடங்கு நேரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை இளைஞர் கொலை  இளைஞர் கொலை  Madurai Youth Murder  Youth Murder  மாடக்குளம் இளைஞர் கொலை  Madakulam Youth Murder
Madurai Youth Murder

By

Published : May 3, 2020, 9:35 PM IST

மதுரை மாவட்டம், விராட்டிபத்து அருகேயுள்ள மாடக்குளம் கண்மாய் ஒட்டிய தோப்புக்குள் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், படுகொலை செய்யப்பட்ட நபரின் பெயர் கண்ணன் (38) என்பதும், இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் இந்த காரணங்களால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உண்டா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு நேரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிரபல ரவுடி மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details