வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கொடூரமாக வெட்டிக்கொலை - தாமரைத் தொட்டி இளம்பெண்
மதுரை: வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
மதுரை தாமரைத் தொட்டி அருகே பாரதி உலா வீதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி லாவண்யா, இன்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், லாவண்யாவை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த மாமியாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரையும் வெட்டிவிட்டு, அவர்கள் தப்பிச் சென்றனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லாவண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.