கரோனா நோய்த் தொற்றை கட்டுபடுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏறக்குறைய 40 நாள்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 7 ஆம் தேதியிலிருந்து மதுக்கடைகளை திறக்கபடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, மதுரையில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மதுரை மாநகரில் உள்ள 73 கடைகளிலும் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் சில திருமண மண்டபங்களில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மதுபானக் கடைகள் அனைத்தும் நாளை திறக்கப்படுவதையொட்டி திருமண மண்டபங்களில் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் அனைத்தும் அந்தந்த மதுபானக் கடைகளுக்கு ஊழியர்களால் தற்போது அனுப்பப்பட்டு வருகின்றன.