இதுகுறித்து மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனைச் சேர்ந்த கலியுகநாதன் உள்ளிட்ட 29 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், 'தமிழ்நாடு பஞ்சாயத்து விதிகளின்படி கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பணிகள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவே நடைபெறும். முறைப்படி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கிராமத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் பணிகள் அனைத்தும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவே விடப்படும்.
இதற்கிடையே கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற தாமதமான நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக செயல்பட்டு கிராம பஞ்சாயத்து பணிகளை கவனித்து வந்தனர். தற்போது கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் முடிந்து கடந்த ஜனவரி 20ஆம் தேதியே தலைவர்கள் பொறுப்பேற்ற நிலையிலும், கிராம பஞ்சாயத்து பணிகளுக்கான டெண்டர் பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாக அல்லாமல் கூடுதல் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டு, பேக்கேஜ் டெண்டர் முறையில் விடப்படுவது இது ஏற்கத்தக்கதல்ல.
மதுரை கிராம பஞ்சாயத்து டெண்டர் வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - மதுரை கிராம பஞ்சாயத்து டெண்டர்
மதுரை: கிராம பஞ்சாயத்து பணிகளுக்கு பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் டெண்டர்விடும் முறையை மீண்டும் கொண்டுவரக்கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கிராமத்தின் செயல் தலைவர்களாக இருக்கும் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கே கிராமத்தின் தேவைகள் குறித்து தெரியும். ஆகவே கிராம பஞ்சாயத்து பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விடுவதற்கு தடை விதித்து, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மீண்டும் அந்த அதிகாரத்தை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கைது செய்ய இடைக்கால தடை