மதுரை:மதுரையில் இருந்து காசி வரை செல்லும் ஆன்மிக சுற்றுலா ரயில் ஜூலை 23அன்று புறப்பட்டு, சுற்றுலா நிறைவுபெற்று ஆகஸ்ட் 3ஆம் தேதி அதிகாலை மதுரை வந்து சேர்கிறது.
இந்த நிலையில் மதுரையில் இருந்து இரண்டாவது ஆன்மிக சுற்றுலா ரயில் ஆகஸ்ட் 21அன்று காலை 07.45 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல், திருச்சி,விழுப்புரம்,சென்னை எழும்பூர் வழியாக முதலில் ஹைதராபாத் சென்று அங்கு சலர்ஜங் அருங்காட்சியகம், சார்மினார், ராமானுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை பார்த்த பிறகு ஆகஸ்ட் 24அன்று சீரடி சாய்பாபா தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் சனிசிங்னாபூர் சென்று பின்பு நாசிக் நகரில் இறங்கி திரியம்பகேஷ்வரர், பஞ்சவடி தரிசனம் பார்த்தபின்பு, ஆகஸ்ட் 27 அன்று பண்டரிபுரம் பாண்டுரங்கர் தரிசனம் முடித்துவிட்டு, பின்பு ஆகஸ்ட் 28அன்று சீரடி மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்தர் தரிசனத்தோடு சுற்றுலா ஆகஸ்ட் 29அன்று நிறைவடைகிறது.
சுற்றுலாவில் தங்கும் இடம்,உணவு,உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து ஆகிய வசதிகளுக்கு ஏற்ப 30,000 ரூபாய், 24,000 ரூபாய் மற்றும் 16,900 ரூபாய் என மூன்று வகையிலான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டு குடும்பமாக செல்லும்போது மேலும் கட்டணம் குறைக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ularail.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஈரோடு - பாலக்காடு ரயில் சேவை தொடக்கம்