மதுரை:மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்(ஹைதராபாத்) நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ’செகந்திராபாத் முதல் மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 26 வரை திங்கட்கிழமைகளில் இரவு 09.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை முதல் செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 28 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்குப்புறப்பட்டு, மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.