தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை டூ ராமேஸ்வரத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம் - ராமேஸ்வரம் டூ மதுரை ஆடி அமாவாசை சிறப்பு ரயிலில் 1853 பேர் பயணம் செய்தனர்

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

மதுரை டூ ராமேஸ்வரம் ஆடி அமாவாசை சிறப்பு ரயில் இயக்கம்
மதுரை டூ ராமேஸ்வரம் ஆடி அமாவாசை சிறப்பு ரயில் இயக்கம்

By

Published : Jul 28, 2022, 9:43 PM IST

மதுரை:ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இன்று (ஜுலை 28) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்படி மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட ரயில், காலை 9.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்தது. இது கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்றது.

மதுரை டூ ராமேஸ்வரம் ஆடி அமாவாசை சிறப்பு ரயிலில் இன்று 1,140 பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக 72 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட ரயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்தடைந்தது. ராமேஸ்வரம் டூ மதுரை ஆடி அமாவாசை சிறப்பு ரயிலில் 1,853 பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

இதையும் படிங்க:குடியிருப்பு கட்டுவதில் ரூ.1 கோடி முறைகேடு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details