தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - குஜராத் ஓகா சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு! - ரயில்

Western Railway update: மதுரையிலிருந்து குஜராத் மாநிலம் ஓகா வரை செல்லும் சிறப்பு ரயில் சேவையை வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளதாக மேற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Western Railway update
குஜராத் ஓகா - மதுரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 9:27 AM IST

மதுரை:ஓகா - மதுரை - ஓகா இடையேயான ஓகா சிறப்பு ரயில் சேவையை டிசம்பர் வரை நீட்டித்து மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓகா - மதுரை சிறப்பு ரயில் (09520) ஓகாவிலிருந்து அக்டோபர் மாதத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள், நவம்பர் மாதத்தில் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள் மற்றும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைகளில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் மதுரை - ஓகா சிறப்பு ரயில் (09519) மதுரையிலிருந்து அக்டோபர் மாதத்தில் 6, 13, 20, 27 ஆகிய தேதிகள், நவம்பர் மாதத்தில் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் மற்றும் டிசம்பர் மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 01.15 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.25 மணிக்கு ஓகா சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் என அனைத்தும் இணைக்கப்படும். மேலும், இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு அக்டோபர் 5ஆம் தேதி காலை 8 மணி முதல் துவங்குகிறது என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருச்சி ரயில்வேயில் டிடிஆர் பணி.. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்.. யார் இந்த ராஜேஷ் ரமேஷ்?

ABOUT THE AUTHOR

...view details