தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - திருமங்கலம் புதிய அகல ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம்! - அகல ரயில் பாதை

மதுரை - திருமங்கலம் ரயில் பாதையில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டதையடுத்து, அதில் நாளை மறுநாள் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 1, 2023, 8:29 PM IST

மதுரை - திருமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே 17 கி.மீ., தூரத்திற்கு இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது அகல ரயில் பாதை இணைப்புப் பணிகள் மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த புதிய இரண்டாவது அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முக்கிய ஆய்வினை தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா, மார்ச் 3ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்த இருக்கிறார்.

இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் வேளையில் பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய அகல ரயில் பாதையைக் கடக்க அல்லது நெருங்க முயற்சிக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 32 பேர் உயிரிழப்பு..

ABOUT THE AUTHOR

...view details