திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மே 23 ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது.
மக்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்! - saravanan
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சரவணன், 'மக்களின் தேவையை உணர்ந்து திமுக என்றும் செயலாற்றும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் 2,412 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சரவணனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சரவணன், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். மக்களின் தேவையை உணர்ந்து திமுக என்றும் செயலாற்றும்' என்று அவர் தெரிவித்தார்.