தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2020, 6:54 PM IST

ETV Bharat / state

'சிஏஏ நிறைவேறியதற்கு காரணமே அதிமுகவும் பாமகவும் தான்' - திருமாவளவன்

மதுரை: குடியுரிமைச் சட்டம் நிறைவேறியதற்கு காரணம் அதிமுகவும் பாமகவும் தான் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திப்பு
தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திப்பு

மதுரை விமான நிலையத்தில் விடுதலைs சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதுமையான முறையில் சட்டத்தை இயற்றி, மக்களிடம் ஆதரவு கேட்டுச்செல்கின்றனர். இந்த அளவிற்கு சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவிவருகிறது. அரசியல் கட்சியைத் தாண்டி ஜனநாயக சக்திகள் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகள் இணைந்து ஆதரவு தந்ததால்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெறும் அளவிற்கு போராட்டங்கள் வெடிக்கக் காரணம் ஏற்பட்டுள்ளதும் அதனால்தான்.

தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திப்பு

மறைமுக தேர்தல் காரணமாக பிரதான கட்சியின் வெற்றி வேட்பாளர்களைச் சொகுசு விடுதியில் தங்க வைப்பது போன்ற கலாசாரம் ஏற்படக்கூடாது என்பதற்காகதான், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை வேண்டும் என்கிறோம். அதனால்தான் மறைமுக தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். பாஜக அரசின் வேண்டுகோளுக்கிணங்க அதிமுக அரசு செயல்படுவது, அதன் பலவீனத்தைக் காட்டுகிறது” என்றார்.

இதையும் படிங்க...உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்!

ABOUT THE AUTHOR

...view details