மதுரை கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் முரளிகண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
மதுரையில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை! - கேகே நகர்
மதுரை: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மே 9ஆம் தேதி, குடும்பத்துடன் இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், பூட்டியிருந்த இவரது வீட்டின் கதவை உடைத்து, 35 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் கொல்லையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, நேற்றைய தினம் முரளிகண்ணன் மதுரை திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் நகை திருடப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.