மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையடுத்த விளக்கத்தூண் பகுதியில், பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான பிரபல ஜவுளிக் கடை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, மள மளவென தீ அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்மண்டல தீயணைப்பு துறை தலைவர் சரவணக்குமார் விபத்துக்குள்ளானப் பகுதியை ஆய்வு செய்தார்.
மதுரையில் மீண்டும் தீ விபத்து - ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அப்பகுதியில் இம்மாதத்தில் ஏற்பட்டுள்ள மூன்றாவது தீ விபத்து இதுவாகும். தீபாவளியன்று ஏற்பட்ட ஜவுளிக்கடை தீ விபத்தின்போது, தீயணைப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் இருவர், விபத்துக்குள்ளான கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.ஆதலால் இம்முறை அதீத பாதுகாப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் தீயணைப்பு பணி நடைபெற்றது. முன்னதாக ஏற்பட்ட தீ விபத்துக்களின் எதிரொலியாக தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக்கூறி, முதல்கட்டமாக மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 500 கடைகளுக்கு தீயணைப்புத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் தீ விபத்து