மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நல்லயமநாயக்கர் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவக்குமார் தனது மனைவி பரமேஸ்வரி மகள் அர்ச்சனாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான இவர் குடித்துவிட்டு மனைவி பரமேஸ்வரியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.இதனால் அவரது மகள் அர்ச்சனா கோபமடைந்து அருகிலிருந்த மண்ணெண்னைய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மது போதையில் தகராறு: தாயும் மகளும் தீக்குளித்து மரணம் - தந்தை மது போதையில் தகராறு
மதுரை: அலங்காநல்லூரில் தந்தை மது போதையில் தகராறு செய்ததில் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மகளும் உயிரிழந்துள்ளார்.
madurai tasmac issue two women's suicide
தாய் பரமேஸ்வரி உடனடியாக தடுக்க முயன்றபோது அவரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். இருவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் 80 சதவீத காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாய் பரமேஸ்வரி கடந்த வாரம் உயிரிழந்தார்.இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பெற்று வந்த மகள் அர்ச்சனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வலைவீச்சு!