மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சிஇஓஏ பள்ளி சார்பாக மரங்களை பாதுகாப்போம் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் மரங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை - guinness record
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சிஇஓஏ பள்ளி மாணவர்கள் 7 ஆயிரம் பேர் ஒன்று கூடி ஒரே இடத்தில் மரங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து சாதனை படைத்தனர்.
கின்னஸ்
இந்நிகழ்ச்சியை, பள்ளியின் தலைமையாசிரியர் காரல் மார்க்ஸ் தலைமையில் சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
இதேபோல் நெதர்லாந்து நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி ஓவியம் வரைந்து புரிந்த கின்னஸ் சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.