மதுரை தெற்குவாசல் பகுதியில் பி5 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் காவலர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது பி5 காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை தெற்குவாசல் காவல் நிலையம், அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இங்கு 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் பிற காவலர்களுக்கு இதுவரை எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.