மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆட்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வினித் (16). இவர் மதுரையிலுள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு பயின்றுவருகிறார்.
இந்நிலையில், விடுமுறையால் சொந்த ஊரிலிருந்த சிறுவன், இன்று அங்குள்ள சுடுகாடு பகுதியில் உயிரிழந்து கிடப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் காவலர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, சிறுவனின் கை மணிக்கட்டில் காயங்கள் இருந்துள்ளன. மேலும் குரல்வலை நெரிக்கப்பட்டு, பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்பட்டும் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவலர்கள், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.