இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு கட்டணத்தைத் திருப்பி அளிப்பதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இயங்கிவருகின்றன.
முன்பதிவு செய்த ரயில் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியீடு! - Train reservation
மதுரை: ஊரடங்கின்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் இன்று வெளியிட்டுள்ளது.
மற்ற மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கட்டணத்தைத் திருப்பி அளிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை (ஜூலை 30) முதல் பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படவிருக்கின்றன.
இந்த முன்பதிவு மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளை) செயல்படவிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மையங்கள் செயல்படும். எனவே பொதுமக்கள் ஊரடங்கின்போது ரத்துசெய்யப்பட்ட ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை ரத்துசெய்து முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.