தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் வெட்டிப் படுகொலை - மதுரை மாநகரில் பரபரப்பு! - இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை

மதுரையில் இன்று பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வெட்டி படுகொலை - மதுரை மாநகரில் பரபரப்பு!
இளைஞர் வெட்டி படுகொலை - மதுரை மாநகரில் பரபரப்பு!

By

Published : Dec 21, 2022, 8:22 PM IST

இளைஞர் வெட்டிப் படுகொலை - மதுரை மாநகரில் பரபரப்பு!

மதுரை:மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரை செல்லூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து செல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியை தாலிக்கயிறுகொண்டு நெரித்துக்கொன்ற குடிமகனுக்கு ஆயுள்: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details