தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் புதிதாக மூன்று சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டது ஏன்? - நீதிபதிகள் கேள்வி - புதிதாக மூன்று சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டது ஏன்

மதுரை: சுற்றுச் சாலையில் புதிதாக மூன்று சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சி ஆணையரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

high Court madurai bench, issue judge questioning, புதிதாக மூன்று சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டது ஏன், சுங்கச் சாவடி கொள்ளை
சுங்கச் சாவடி கொள்ளை

By

Published : Dec 19, 2019, 9:46 AM IST

மதுரையைச் சேர்ந்த இம்மானுவேல், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ஒரு பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி மையம் அமைத்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என மூன்று சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் வாகனங்கள், மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்), கப்பலூர் என 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் அவசரமாக செல்ல வேண்டிய அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன. புதிதாக அமைக்கப்பட்ட மூன்று சுங்கச்சாவடிகளில் வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்குப் புறம்பானது. எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்க, அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

அரசின் அலட்சியத்தால் கையை இழந்து உயிருக்குப் போராடும் பள்ளி மாணவர்!

இந்த மனு நேற்று நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகு ஏன் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், மதுரை சுற்றுச் சாலையில் தற்போது புதிதாக மூன்று சுங்கச் சாவடிகள் அமைக்பப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை, மதுரை மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details