தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து நூதன போராட்டம் - குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கை

மதுரை: வைகையாற்று கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக தூக்கிலிட்டும், சமைத்தும் அப்பகுதி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து நூதன போராட்டம்
ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து நூதன போராட்டம்

By

Published : Dec 30, 2020, 6:23 PM IST

மதுரை வைகையாற்றின் வடகரையோர பகுதிகளான புளியந்தோப்பு, மதிச்சியம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டிஸும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சியின் நடவடிக்கைகளை கண்டித்தும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து அடுப்புவைத்து சமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கயிற்றால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த வாழ்வாதாரப் போராட்டத்தில் தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளுடன் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மாநகராட்சி மற்றும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்துசென்றனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து நூதன போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறும் குடியேறும் போராட்டத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரசு தங்களுக்கு மாற்று இடம் வழங்காவிட்டால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தாங்கள் தற்கொலை செய்வது தான் வழி என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சத்தியில் குடிநீர் விநியோகம் தடை: நடவடிக்கை எடுக்க கோரும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details