தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் இதுவரை 13 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைவு!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் மதுரையில் மட்டும் இதுவரை 13 ஆயிரத்து 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

corona
corona

By

Published : Sep 1, 2020, 10:37 PM IST

கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மதுரையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தாக்கம் தொடங்கியது. அதன் வேகம் மே மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கி, ஜூலை இரண்டாவது வாரத்தில் உச்சத்தை அடைந்தது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் பரிசோதனைகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது.

மதுரையில் மட்டும் இதுவரை 14 ஆயிரத்து 279 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 13 ஆயிரத்து 21 பேர் பூரண குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர், 358 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 900 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 128 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 90 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திறப்பு - நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details