மதுரையில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா தொற்று மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது.
மதுரையில் இன்று 109 பேருக்கு கரோனா: 89 நபர்கள் குணமடைந்தனர்!
மதுரை: கரோனா தொற்று காரணமாக இன்று 109 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 89 பேர் குணமடைந்த நிலையில், இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
corona ward
ஜூன் இறுதி வாரத்தில் இருந்து குறைய தொடங்கி தற்போது வரை அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக மூன்று ஆயிரத்தில் இருந்து நான்கு ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் அதன் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.