தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

19 மாதங்களுக்குப் பிறகு முன்பதிவில்லா ரயில் சேவை தொடக்கம் - மதுரை ராமேஸ்வரம்

19 மாதங்களுக்குப் பிறகு நேற்றுமுதல் மதுரை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

19 மாதங்களுக்குப் பிறகு முன்பதிவில்லா ரயில் சேவை தொடக்கம்
19 மாதங்களுக்குப் பிறகு முன்பதிவில்லா ரயில் சேவை தொடக்கம்

By

Published : Oct 8, 2021, 7:33 AM IST

மதுரை: 19 மாதங்களுக்குப் பிறகு நேற்றுமுதல் (அக். 7) மதுரை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06654 ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து அதிகாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை வந்துசேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06655 மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். கரோனா காலம் என்பதால் நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை 19 மாதங்களுக்குப் பிறகு தற்போது தொடங்கியுள்ளதாகத் தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details