தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மதுரை ரயில் நிலையம் அடுத்த 3 ஆண்டுகளில் உலகத்தரத்தில் மறுசீரமைக்கப்படும்" - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!

மதுரை ரயில் நிலையம் உலக தரத்திற்கு இணையாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகள் அடித்த மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

mdu
mdu

By

Published : Dec 8, 2022, 5:30 PM IST

மதுரை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 430 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மறு சீரமைப்பு பணிக்கான விளக்கப் படங்களை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, மதுரை கோட்ட அலுவலகத்தில் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு மதுரை - நாகர்கோவில் இடையே நடைபெறும் இரட்டை அகல ரயில் பாதைகள் மற்றும் பணிகளை சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆர்.என்.சிங், "மதுரை ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்காமல் தவிர்க்க, மதுரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தெற்கு ரயில்வேயில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதுரை ரயில் நிலையம் திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ரயில்கள் மூலம் மதுரைக்கு வருகை தருகின்றனர்.

மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டம்

ஆகையால் இந்த ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக ஒவ்வொரு விமான நிலையங்களிலும் இருக்கக்கூடிய வசதிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கி, மூன்று வருடங்களுக்குள் நிறைவடையும். உள்ளூர் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இங்கு கட்டமைப்புகள் அமைக்கப்படும்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நாளை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகள், புதிய பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்ட பணிகள் ஆகியவற்றை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அனுமதிக்கலாமா? பாமக நிறுவனர் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details