மதுரையில் தேவர் சமுகத்தை சார்ந்த பலர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட கோரி கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
இதையடுத்து இன்று மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை தேவர் சமூகத்தினர் மறிக்க போவதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில் நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.