மதுரை போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதைக்கான இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி உசிலம்பட்டியில் நிறைவடைவுள்ளது. சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மதுரை போடி மீட்டர் கேஜ் ரயில்வே பாதை, கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை - உசிலம்பட்டி தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறை! - track check by madurai railway officers
மதுரை: ரயில்வே துறையினர் மதுரை போடி அகல ரயில் பாதையில் தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை டூ உசிலம்பட்டி
தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறை
மேலும், வருகின்ற 2021ஆம் ஆண்டிற்குள் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தற்போது உசிலம்பட்டி வரையில் ஏறக்குறைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, அப்பாதையில் உசிலம்பட்டி வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு தண்டவாள ஒழுங்கமைப்பு சோதனையில் ரயில்வே துறையினர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கடலூரில் வேலைநிறுத்தத்தில் களமிறங்கிய விஏஓக்கள்: பாதிப்படைந்த பொதுமக்கள்