மதுரை பொதுப்பணித்துறையின் கட்டடப்பிரிவில் செயற்பொறியளராகப் பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார். இவர் தேனி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொறியாளராகப் பணியாற்றி உள்ளார். இதனிடையே மதுரை பென்னிகுக் பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டடப்பிரிவின் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கழிப்பறை கட்டுவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.6.50 லட்சத்துக்கான ஒப்பந்தப் பணி ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு செயற்பொறியாளர் ரமேஷ்குமார் வற்புறுத்திய நிலையில், ரூ.50 ஆயிரம் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இந்த லஞ்சம் பெறப்பட்டபோது வீடியோவாக பாதிக்கப்பட்டவர் பதிவு செய்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் ஒப்பந்ததாரரிடம் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனையடுத்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரையடுத்து ரமேஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:லஞ்சம் வாங்கி கொண்டு கடத்தல் கும்பலை விட்ட 4 காவலர்கள் சஸ்பெண்ட்
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், 'பொறியாளர் ரமேஷ்குமார், தான் பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலும் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார். மதுரை மாநகரின் முக்கியப் பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பே அபார்ட்மெண்ட்டில் கோடிக்கணக்கான மதிப்புடைய வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.