மதுரை, ஆனையூர் பகுதியில் உள்ள மல்லிகை நகரில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு வந்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளர் ஹேமமாலா தலைமையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடைபெற்றது.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை : பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
![பாலியல் தொழிலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது Madurai prostitution Case](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:08:56:1599388736-tn-mdu-01-prostitution-koodal-script-7208110-06092020125549-0609f-1599377149-388.jpg)
Madurai prostitution Case
இந்தச் சோதனையில், தனி நபர்கள் சிலர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஒரு பெண் உள்பட நான்கு பேரை கூடல்புதூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.