தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடேங்கப்பா... 2 சொட்டு சானிடைசருக்கு நூறு ரூபாயா? - மதுரை சானிடைசருக்கு 100 கட்டணம்

மதுரை: தனியார் மருத்துவமனை ஒன்று நோயாளிக்குக் கொடுத்த இரண்டு சொட்டு சானிடைருக்கு 100 ரூபாய் கட்டணமாகப் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

hospital
hospital

By

Published : Jun 6, 2020, 5:40 PM IST

மதுரையிலுள்ள தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்று, மருத்துவ ஆலோசனை பெற வந்த ஒருவருக்கு, மருத்துவமனை வாசல் முன்பாக கைகளைச் சுத்தும் செய்ய கொடுத்த சானிடைசருக்கு, 100 ரூபாய் கட்டணத்திற்கான ரசீதைக் கொடுத்துள்ளது.

இதனைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து, மருத்துவமனை வரவேற்பறையில் உள்ள ஊழியர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், ”மருத்துவமனைக்குள் நுழையும்போது உங்கள் கைகளில் தெளிக்கப்பட்ட சானிடைசருக்குதான், அந்த 100 ரூபாய் கட்டணம்” என்று கூறியுள்ளனர்.

மருத்துவமனை நோயாளிக்கு கொடுத்த ரசீது

இது தொடர்பாக அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாக தொலைபேசி எண்ணில் ஈடிவி பாரத் தமிழ் சார்பாக தொடர்புகொண்டு கேட்டபோது, அந்தத் தொலைபேசி எண் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்குள்ள நபரிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டோம். ”இது எங்களது பார்வைக்கு வந்திருக்கிறது. நாங்கள் எங்களது தலைமையின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம்” என்று மட்டுமே தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணய
ம்

ABOUT THE AUTHOR

...view details