தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக்கடை அதிபரின் வீட்டில் மிளகாய் பொடி தூவி 150 பவுன் நகை, வைரம் கொள்ளை! - திருட்டு சம்பவம்

மதுரை: சின்ன சொக்கிகுளம் பகுதியில் நகைக்கடை அதிபர்  வீட்டில் 150 பவுன் நகைகள், வைரம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திரைப்பட பாணியில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

theft

By

Published : Apr 3, 2019, 9:10 AM IST

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சங்கர். இவர் குடும்பத்துடன் மார்ச் 26ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த தருணத்திற்காகவே காத்திருந்தகும்பல் ஒன்றுவீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர், வீட்டிலிருந்த 150 பவுன் நகைகள், வைரம், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதையடுத்து, வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் கொள்ளையடித்த பிறகு, தடயம் தெரியக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நகைகள் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details