மதுரை:மதுரையில் பழிக்குப்பழி சம்பவமாக கொலை, வெட்டு குத்து சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு உடனடியாக செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்களை மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (நவம்பர் 27) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், "நகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் ரவுடிகளின் நடமாட்டத்தை குறைக்கவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நகர் முழுவதும் ரோந்து சொல்ல ஏதுவாக 67 இருசக்கர வாகனங்கள் பணியை மேற்கொள்ள உள்ளன.