மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் மக்களவை தேர்தல் பாதுகாப்பு குறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்கள் சந்தித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
மதுரையில் எந்தவிதத்திலும் வாக்குப்பதிவு குறையவில்லை- மாநகர காவல்துறை
மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நான்கு மாசி வீதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் எந்தவிதத்திலும் வாக்குப்பதிவு குறையவில்லை என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் காலை 6 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 12மணிக்கு நிறைவு பெற்றது. சித்திரை திருவிழா, மக்களவைத் தேர்தல் இரண்டும் ஒரே நாள் வந்த காரணத்தால் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர். திருவிழாக் கூட்டத்தில் குற்றங்கள் மிக மிகக் குறைந்துள்ளது. இந்த திருவிழா பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இருந்தது.
சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு மாசி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் எந்தவிதத்திலும் வாக்குப்பதிவு குறையவில்லை. அப்பகுதியில் வாக்காளர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டது. இந்த தேரோட்ட திருவிழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் மற்றும் சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணியில் 5500 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.