கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு வருகின்ற மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருப்பதால் மக்களின் கூட்டத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு தினங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் (ஏப்ரல் 29) 9 மணியுடன் முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணிக்குள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் அனைவரும் மதுரை வில்லாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் மளிகை கடைகள், காய்கறி சந்தைகளில் அத்தியாவசியப் பொருள்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.