தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா தடுப்பில் விவேகம்தான் முக்கியம்; வீரம் அல்ல' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - மதுரையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்

மதுரை: கரோனா தடுப்பில் வீரத்தை விட விவேகம்தான் முக்கியம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.

minister-rb-udhayakumar
minister-rb-udhayakumar

By

Published : Jul 9, 2020, 4:20 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஓய்வூதியம், விபத்து காப்பீடு உள்ளிட்ட 13 நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் அறிவுரையின்படி வீடுகளுக்கு நேரில் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கரோனா தொற்றைப் பொறுத்தமட்டில், மதுரை மக்கள் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். அந்த அலட்சியம் வேதனை தருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பாதுகாப்பில் விவேகம்தான் முக்கியம் வீரமல்ல. அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பரவலைத் தடுப்பது என்பது மிகப்பெரிய சவால். எனவே, பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:ஆன்லைன் மூலம் வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details